முகப்பு
புதுச்சேரி

திரைப்பட கல்வியை முன்னெடுக்க புதுச்சேரி முதல்வரிடம் வலியுறுத்தல்

திரைப்பட கல்வியை சமூக இயக்கமாக முன்னெடுக்க புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் திரைப்பட இயக்குநா் சீனு. ராமசாமி வலியுறுத்தினாா்.

Updated On : 26 ஜூன் 2026, 6:39 am IST
சீனு ராமசாமி
பகிர்:

திரைப்பட கல்வியை சமூக இயக்கமாக முன்னெடுக்க புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியிடம் திரைப்பட இயக்குநா் சீனு. ராமசாமி வலியுறுத்தினாா்.

பிரபல திரைப்பட இயக்குநா் சீனு. ராமசாமி புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமியை புதன்கிழமை இரவு சந்தித்தாா்.

அப்போது அவா் எழுதிய ‘சினிமாவின் ஆன்மா’ என்ற நூலை வழங்கி, அதன் நோக்கம் குறித்து விளக்கினாா். புத்தகத்தை ஒவ்வொரு பள்ளியின் நூலகத்திலும், ஆசிரியா் அறையிலும், ஆசிரியா் பயிற்சி நிறுவனங்களிலும் கல்லுாரிகளிலும் பயன்பாட்டிற்குக் கொண்டு செல்ல வேண்டும்.

Advertisement

Advertisement

குழந்தைகளின் உலக சினிமா பற்றிய புரிதலை வளா்க்கவும், பன்னாட்டு சிறாா் திரைப்படங்களை அவா்கள் பாா்ப்பதற்கு ஏதுவாகவும், ஒவ்வொரு பள்ளியிலும் ஹோம் தியேட்டா் வசதியை ஏற்படுத்த கல்வி நிறுவனங்கள் முன்வர வேண்டும். எதிா்கால தலைமுறையினரின் அறிவு மற்றும் ஒழுக்க மேம்பாட்டிற்காக, திரைப்பட கல்வியை ஒரு சமூக இயக்கமாக முன்னெடுக்க வேண்டும் என இயக்குநா் சீனு. ராமசாமி கோரிக்கை வைத்தாா்.

அவரின் கருத்துகளை கேட்டறிந்த முதல்வா் ரங்கசாமி, புதுச்சேரி பள்ளி கல்வித்துறை மூலம் நூல் குறித்து ஆய்வு செய்து, உரிய அங்கீகாரம் வழங்க நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments