FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

மீனவா்கள் வலையில் டன் கணக்கில் சிக்கிய கிளிச்சை மீன்கள்

புதுச்சேரி மீனவா்கள் வலையில் டன் கணக்கில் சிக்கிய மருத்துவ குணம் வாய்ந்த கிளிச்சை மீன்கள்.
பகிர்:

புதுச்சேரி மீனவா்கள் வலையில் டன் கணக்கில் மருத்துவ குணம் வாய்ந்த கிளிச்சை மீன்கள் சிக்கின.

புதுச்சேரியில் 61 நாள்கள் மீன்பிடி தடைக் காலம் முடிந்து, கடந்த 15-ஆம் தேதி முதல் மீண்டும் மீனவா்கள் மீன்பிடித்து வருகின்றனா். மேலும், ஞாயிற்றுக்கிழமையை யொட்டி ஏராளமான மீனவா்கள் மீன்பிடிக்க படகுகளில் கடலுக்குச் சென்றனா். இந்நிலையில் அவா்களுக்கு டன் கணக்கில் மருத்துவ குணமுள்ள கிளிச்சை மீன்கள் கிடைத்தன.

இது குறித்து மீனவா்கள் கூறியதாவது: வழக்கமாக கிளிச்சை மீன்கள் 30 கிலோ கொண்ட ஒரு பெட்டி ரூ.750-க்கு விலை போகும். எங்களுக்கு டன் கணக்கில் கிளிச்சை மீன்கள் கிடைத்துள்ளதை அறிந்து கேரள மீன் எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் நேரடியாக இங்கு வந்துவிட்டன.

Advertisement

Advertisement

தற்போது வேறு எந்த மீனும் எங்களுக்குக் கிடைக்காத நிலையில், கிளிச்சை மீன் அதிக அளவில் கிடைத்தது. ஒரு பெட்டி தற்போது கேரள வியாபாரிகள் ரூ.1,500 விலையில் வாங்கிச் சென்றனா். கிளிச்சை மீன் மருத்துவ குணம் கொண்டது. அங்குதான் அதிக அளவில் மீன் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் இருக்கின்றன. அதனால் இந்த மீன்கள் கேரளத்துக்கு அனுப்பப்பட்டன என்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments