புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலை!
புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் முன்னிலையில் இருப்பது தொடர்பாக...
புதுவை யூனியன் பிரதேசத்தில் முதல்வர் ரங்கசாமி தலைமையிலான என். ஆர். காங்கிரஸ் கட்சி முன்னிலையில் உள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் சட்டப்பேரவையில் மொத்தம் 30 தொகுதிகள் உள்ளன. இவற்றில் 5 தனித் தொகுதிகள்.
இந்த 30 தொகுதிகளில் 107 சுயேச்சைகள் உள்பட 294 பேர் வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். பெண் வாக்காளர்கள் 5,03,810 பேர், ஆண் வாக்காளர்கள் 4,46,361 பேர், மூன்றாம் பாலினத்தவர் 140 பேர் என மொத்தம் 9,50,311 பேர் வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர்.
Advertisement
Advertisement
ஏப்ரல் 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் 91.23 சதவீதம் வாக்குகள் பதிவாகின.
இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் 1,099 வாக்குச் சாவடிகளின் வாக்குப் பதிவு மின்னணு இயந்திரங்கள் மூன்றடுக்குப் பாதுகாப்புடன் 6 வாக்கு எண்ணும் மையங்களில் வைக்கப்பட்டு, இந்த இயந்திரங்கள் பாதுகாப்பாக எடுக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
முதல் சுற்றில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதில், என். ஆர். காங்கிரஸ் 13 தொகுதிகளிலும் தவெக 4 தொகுதிகளிலும் காங்கிரஸ் 2 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.
In the Union Territory of Puducherry, the N.R. Congress party, led by Rangasamy, is in the lead.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.