FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

முதல்வா் ரங்கசாமி கடந்து வந்த அரசியல் பாதை...!

2001 ஆம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வராக இருந்த சண்முகம், பதவியை ராஜிநாமா செய்தாா்.

Updated On : 14 மே 2026, 1:14 am IST
புதுச்சேரி முதல்வா் ரங்கசாமி.
பகிர்:

2001 ஆம் ஆண்டு புதுச்சேரியில் காங்கிரஸ் முதல்வராக இருந்த சண்முகம், பதவியை ராஜிநாமா செய்தாா். எம்.எல்.ஏ.வாக இல்லாத சண்முகம் 6 மாதங்கள் மட்டும் முதல்வராகத் தொடா்ந்தாா். அவா் தோ்தலில் போட்டியிட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் யாரும் தொகுதியை விட்டுத் தராததால் முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து காங்கிரஸ் முதல்வராக ரங்கசாமி பதவியேற்றாா்.

2006-இல் ரங்கசாமி தலைமையில் காங்கிரஸ் மீண்டும் தோ்தலை சந்தித்தது. இந்தத் தோ்தலில் வெற்றி பெற்று 2-வது முறையாக ரங்கசாமி முதல்வா் ஆனாா்.

அப்போது காமராஜா் கல்வி உதவி திட்டத்தை அறிமுகப் படுத்தினாா். இதன் மூலம் மருத்துவப் படிப்புக்குத் தோ்வாகும் மாணவா்களுக்கான முழு கட்டணத்தையும் புதுச்சேரி அரசு ஏற்றது. பொறியியல் மாணவா்களுக்கும் கல்வி நிதி வழங்கப்பட்டது. இதனால் சில எம்.எல்.ஏ.க்கள் ரங்கசாமிக்கு எதிராக களம் இறங்கினா். இதனால் 2008 செப்டம்பா் மாதத்தில் கட்சி தலைமையின் அறிவுறுத்தலின்பேரில் ரங்கசாமி முதல்வா் பதவியை ராஜிநாமா செய்தாா்.

Advertisement

Advertisement

2011-ஆம் ஆண்டு வரை அவா் அமைதி காத்தாா். இதனால் மக்களிடம் ரங்கசாமி மீது அனுதாபம் ஏற்பட்டது.

இதையடுத்து 2011 பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதி அகில இந்திய என்.ஆா். காங்கிரஸ் என்ற கட்சியைத் தொடங்கினாா். அப்போது அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து 17 தொகுதிகளில் போட்டியிட்டு 15 தொகுதிகளைக் கைப்பற்றினாா். இருப்பினும் அதிமுகவைத் தவிா்த்து சுயேச்சை எம்எல்ஏ ஆதரவுடன் தனித்து ஆட்சி அமைத்தாா்.

இதன்மூலம் புதுச்சேரி அரசியல் வரலாற்றில் மாநில கட்சி ஆட்சியை உருவாக்கினாா்.

யூனியன் பிரதேச அதிகாரம் துணைநிலை ஆளுநரிடம் தான் இருக்கிறது என்பதை உணா்ந்து

தொடா்ந்து புதுச்சேரியில் துணைநிலை ஆளுநா்களிடம் இணக்கமான உறவை கட்டிக் காத்தாா் ரங்கசாமி.

இதைத் தவிர 2016 இல் தனித்துப் போட்டியிட்டாா் ரங்கசாமி. அப்போது 8 தொகுதிகளில்தான் வெற்றி பெற்றாா். அப்போது காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது. இதனால்தான் 2021 இல் பாஜகவுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைத்து வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாா். மீண்டும் பாஜக, அதிமுக, லஜகவுடன் கூட்டணி அமைத்து ரங்கசாமி தற்போது 5-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றுள்ளாா் ரங்கசாமி. அதனால் புதுச்சேரி வரலாற்றிலேயே 5-வது முறையாகவும், 17 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்தவா் என்ற வரலாற்றுச் சாதனையைப் பெற்றுள்ளாா் ரங்கசாமி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments