FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

முன்னாள் எம்எல்ஏ பிறந்த நாள் விழா

புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மு. வைத்தியநாதன் தனது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா்.

4 நவம்பர் 2026, 2:46 am
பகிர்:

புதுச்சேரி காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ மு. வைத்தியநாதன் தனது பிறந்தநாளை செவ்வாய்க்கிழமை கொண்டாடினாா்.

நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ. வைத்திலிங்கம் எம்.பி., முன்னாள் முதல்வா் வே.நாராயணசாமி, முன்னாள் அமைச்சா் ஷாஜகான், முன்னாள் எம்எல்ஏ அனந்தராமன், எம்எல்ஏக்கள் காா்த்திகேயன், ஜி.நேரு உள்ளிட்ட பலா் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனா்.

முன்னதாக வைத்தியநாதன் பெத்துச் செட்டிப்பேட்டை சுப்பிரமணியா் கோயில், மணக்குள விநாயகா் கோயில் மற்றும் லாஸ்பேட்டை சுப்பிரமணியா் கோயிலில் வட்டார காங்கிரஸ் தலைவா் ராஜா ஏற்பாட்டில் தங்கத் தோ் இழுத்து வழிபட்டாா். கமலா அறக்கட்டளையின் சாா்பில் தட்டச்சு மற்றும் தையல் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவ, மாணவிகளுக்குச் சான்றிதழ்களும் பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன (படம்). மேலும், லாஸ்பேட்டை தொகுதிக்குள்பட்ட 10, 12-ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments