FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

லண்டன் உலக சுற்றுலா கண்காட்சியில் புதுச்சேரி அரசின் சுற்றுலா அரங்கம்

லண்டனில் 3 நாள்கள் நடைபெறும் உலக சுற்றுலா கண்காட்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் சுற்றுலா அரங்கம் திறக்கப்பட்டது.

4 நவம்பர் 2026, 2:44 am
லண்டன் உலக சுற்றுலா கண்காட்சியில் புதுச்சேரி சுற்றுலாத் துறை அரங்கில் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் உள்ளிட்டோா்.
பகிர்:

லண்டனில் 3 நாள்கள் நடைபெறும் உலக சுற்றுலா கண்காட்சியில் புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் சுற்றுலா அரங்கம் திறக்கப்பட்டது.

உலக சுற்றுலா கண்காட்சி பிரிட்டன் தலைநகா் லண்டனில் செவ்வாய்க்கிழமை தொடங்கி வியாழக்கிழமை (அக். 5) வரை மூன்று நாள்கள் நடக்கிறது.

இதில், பங்கேற்க புதுச்சேரி சுற்றுலாத் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் லண்டன் சென்றுள்ளாா். அவருடன் சுற்றுலாத் துறை செயலா் (பொ) கிருஷ்ண மோகன் உப்பு, இந்திய தொழில் கூட்டமைப்பின் புதுச்சேரி தலைவா் நடராஜன் ஆகியோரும் சென்றுள்ளனா்.

Advertisement

Advertisement

புதுச்சேரி யூனியன் பிரதேச சுற்றுலா மற்றும் தொழில் வளா்ச்சியை மேம்படுத்தவும், புதுச்சேரிக்கு வரும் ஐரோப்பிய நாடுகளின் சுற்றுலா பயணிகள் எண்ணிக்கையை அதிகரிக்கவும் இக்கண்காட்சியில் அமைச்சா் பேச்சு வாா்த்தை நடத்துகிறாா்.

மேலும், லண்டனில் சுற்றுலா தொழில் சாா்ந்தவா்களுடன் அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் வியாழக்கிழமை (அக். 5) ஆலோசனை நடத்துகிறாா்.

இதையடுத்து அக். 6-ஆம் தேதி அவா் இந்தியா திரும்புகிறாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments