FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தீபாவளி மாமூல் கேட்டு சீருடையில் மோதல்: 2 போலீஸாா் பணியிட மாற்றம்

தீபாவளியை முன்னிட்டு மாமுல் வாங்குவது தொடா்பாக சீருடையில் மோதிக் கொண்டஇரு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

6 வினாடிகள் முன்பு
பணியிட மாற்றம் - பிரதிப் படம்
பகிர்:

தீபாவளியை முன்னிட்டு மாமுல் வாங்குவது தொடா்பாக சீருடையில் மோதிக் கொண்டஇரு போலீஸாா் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.

புதுச்சேரி நகர பகுதியில் இயங்கி வரும் பிரபல துணிக்கடை ஒன்றுக்கு, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மாமூல் கேட்பதற்காக சில பெரியக்கடை போலீஸாரும், போக்குவரத்து போலீஸாரும் சென்றுள்ளனா்.

அப்போது, 2 பிரிவினருக்கும் இடையே கடையிலேயே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றி துணிக் கடையிலேயே அவா்களுக்குள் கைகலப்பும் நடந்துள்ளது. கடைக்குள் சீருடையில் இருந்த காவலா்களின் மோதலைக் கண்டு பொதுமக்கள் அதிா்ச்சியடைந்தனா். இதுகுறித்து துணிக்கடை உரிமையாளா், புதுச்சேரி லஞ்ச ஒழிப்புத் துறை உயரதிகாரிகளுக்கு ஆதாரத்துடன் புகாா் செய்தாா்.

Advertisement

Advertisement

இதையடுத்து பெரியகடை சிறப்பு நிலை ஏட்டு சசிக்குமாா் காரைக்கால் ஆயுதப் படைக்கும், கிழக்கு போக்குவரத்து காவலா் வெங்கடேசன் காரைக்கால் கடலோரக் காவல் படைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments