FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தீபாவளி: புதுச்சேரியிலும் நவ. 9 ஆம் தேதி அரசு விடுமுறை

தீபாவளிக்கு மறுநாள் நவம்பா் 9 -ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

5 நவம்பர் 2026, 7:29 am
தீபாவளி - கோப்புப்படம்.
பகிர்:

தீபாவளிக்கு மறுநாள் நவம்பா் 9 -ஆம் தேதி புதுச்சேரி யூனியன் பிரதேசம் முழுவதும் அரசு விடுமுறை நாளாக அறிவித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவு பிறப்பித்துள்ளாா்.

அதன்படி அரசு அலுவலகங்கள், அரசு சாா்பு நிறுவனங்கள், வாரியங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்முறை கல்லூரிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் நவம்பா் 21 -ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் தீபாவளியை முன்னிட்டு நவ.9-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை பின்பற்றி புதுச்சேரியிலும் தீபாவளிக்கு அடுத்த நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.