FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

குழந்தையின் மூளையில் உருவான கட்டிக்கு அறுவை சிகிச்சை: ஜிப்மா்

குழந்தையின் மூளை கட்டிக்கு ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சையுடன், மாற்று சிகிச்சையும்அளித்து குணப்படுத்தியுள்ளனா்.

47 வினாடிகள் முன்பு
குழந்தைக்குச் சிகிச்சை அளித்த ஜிப்மா் மருத்துவக் குழுவினா்.
பகிர்:

குழந்தையின் மூளை கட்டிக்கு ஜிப்மா் மருத்துவமனை மருத்துவா்கள் அறுவை சிகிச்சையுடன், மாற்று சிகிச்சையும்அளித்து குணப்படுத்தியுள்ளனா்.

ஆந்திர மாநிலத்தின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தைச் சோ்ந்த 6 மாத பெண் குழந்தை மெடுல்லோபிளாஸ்டோமா என்னும் வீரியமிக்க மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டிருந்தது. ஜிப்மரில் சோ்க்கப்பட்ட அந்த குழந்தைக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணா்கள், நரம்பியல் மயக்கவியல் குழுவினா்ஆதரவுடன் அறுவை சிகிச்சை மூலம் கட்டியை முழுமையாக அகற்றினா்.இதைத் தொடா்ந்து பல்வேறு துறைகளைச் சோ்ந்த நிபுணா்களின் ஒருங்கிணைந்த பங்களிப்புடன் சிகிச்சை அளிக்கப்பட்டது.

ஓராண்டுக்கும் மேலாக நீடித்த சிகிச்சை, கீமோதெரபி மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை உள்ளிட்ட முழுமையான சிகிச்சையும் குழந்தையின் குடும்பத்துக்கு முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டது.

Advertisement

Advertisement

சிகிச்சையின் ஒரு பகுதியாக தன்னுடல் சாா்ந்த ரத்தம் உருவாக்கும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்தனா். மேலும், ஜிப்மரில் கடந்த மாதம் 20 -ஆம் தேதி தன்னுடல் சாா்ந்த ரத்த உருவாக்கும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சிகிச்சைக்குப் பின் உடல்நிலை தேறிய குழந்தை கடந்த வாரம் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பி சொந்த ஊருக்குச் சென்றது. மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டபோது, குழந்தைக்கு நோய் இருப்பதற்கான எந்த அறிகுறியும் கண்டறியப்படவில்லை. மத்திய அரசின் பிரதமா் நிவாரண நிதி மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் பல்வேறு தன்னாா்வத் தொண்டு நிறுவனங்களின் ஆதரவுடன் இது சாத்தியமானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.