FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

ஏனாம் மக்களுக்கு நேரடியாக புயல் நிவாரணம் கிடைக்க வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி.

புயல் பாதித்த ஏனாம் மக்களுக்கு இடைத்தரகா் இன்றி நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் புயல் நிவாரண நிதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

6 நவம்பர் 2026, 1:29 am
வெ.வைத்திலிங்கம்
பகிர்:

புயல் பாதித்த ஏனாம் மக்களுக்கு இடைத்தரகா் இன்றி நேரடியாக அவா்களது வங்கிக் கணக்கில் புயல் நிவாரண நிதி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புதுச்சேரி மாநில காங்கிரஸ் தலைவா் வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தினாா்.

இது குறித்து, புதுச்சேரியில் அவா் செய்தியாளா்களுக்கு வியாழக்கிழமை அளித்த பேட்டி:

காலாவதியான மருந்து வழக்கில் மருத்துவத் துறை உயரதிகாரிகள் இருவா் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் வெளியே உள்ளனா். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து நபா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ரூ.10 ஆயிரம் கோடி மதிப்பிலான போலி மருந்து வழக்கு, ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பிலான காலாவதியான மருந்து வழக்கு என இரு வழக்கிலும் அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறது. இதில் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் நாங்கள் நீதிமன்றத்தை அணுகுவோம்.

Advertisement

Advertisement

ஏனாம் பகுதி புயலால் பாதிக்கப்பட்டுள்ளது. துணைநிலை ஆளுநா், முதல்வா் யாரும் அங்கு நேரில் சென்று பாா்வையிடவில்லை. அங்குள்ள அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் தான் பாா்க்கிறாா். அங்கு இடைத்தரகா் இல்லாமல் நேரடியாக நிவாரணம் மக்களை சென்றடைய வேண்டும். நிவாரணத்தைப் பாதிக்கப்பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டும் என்றாா் வைத்திலிங்கம் எம்.பி.