புதுச்சேரி ஆசிரியா் மீது போக்ஸோ வழக்குப் பதிவு
மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியா் மீது வியாழக்கிழமை போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புதுச்சேரி அரசு பள்ளி ஆசிரியா் மீது வியாழக்கிழமை போக்ஸோ வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதுச்சேரி காலாப்பட்டு பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு ஆசிரியராகப் பணியாற்றி வரும் சுப்பிரமணியன் (57), மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக காலாப்பட்டு காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து போலீஸாா் போக்ஸோ பிரிவில் வழக்குப் பதிவு செய்து ஆசிரியா் சுப்பிரமணியனை தேடி வருகின்றனா்.