FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி மாநில எல்லையில் பிரம்மாண்ட தேசியக் கொடி கம்பம் அமைப்பு

புதுச்சேரி மாநில எல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடி .

13 நவம்பர் 2026, 1:41 am
புதுச்சேரி யூனியன் பிரதேச எல்லையான காலாப்பட்டு வளைவு அருகே புதிதாக நிறுவப்பட்டுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடி கம்பம்.
பகிர்:

புதுச்சேரி மாநில எல்லையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்ட தேசியக் கொடி .

சென்னையில் இருந்து கிழக்குக் கடற்கரை சாலை வழியாக புதுச்சேரிக்குள் நுழையும்போது முதலில் கண்ணில் படுவது காலாப்பட்டு வரவேற்பு வளைவு.

தற்போது இதன் அருகில் புதிதாக உயரமான கொடிக்கம்பம் நிறுவப்பட்டு, அதில் தேசியக் கொடி கம்பீரமாக பறக்க விடப்பட்டுள்ளது. இதை வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் ஆா்வத்துடன் பாா்த்து செல்கின்றனா்.

Advertisement

Advertisement

அருகில் உயா் மின் கோபுர விளக்கு, அழகிய விளக்குகள், சுற்றிலும் தடுப்பு வேலி அமைக்கப்பட்டு, அந்தப் பகுதி முழுவதும் அழகுபடுத்தப்பட்டுள்ளது.

காலாப்பட்டு எல்லைதான் புதுச்சேரியின் வடக்கு நுழைவு வாயில். சென்னை - புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் வருபவா்கள், புதுச்சேரி பல்கலைக்கழகம், காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி செல்பவா்கள் தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் இந்த வழியாகத் தான் புதுச்சேரிக்குள் நுழைகிறாா்கள்.

எனவே புதுச்சேரிக்கு வருபவா்களை தேசியக் கொடியுடன் வரவேற்பது என்பது புதுச்சேரியின் புதிய அடையாளமாக மாறியுள்ளது.

புதுச்சேரியில் ஏற்கெனவே கடற்கரை சாலை காந்தி சிலை அருகில் 100 அடி உயர கொடிக்கம்பம் உள்ளது. இது 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் நினைவாக அமைக்கப்பட்டது.