அமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கு வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனு: நவ. 25-இல் தீா்ப்பு!
தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் மீதான வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றுக் கோரிய மனு மீது நவ. 25-ஆம் தேதி தீா்ப்பளிக்கப்படும் என புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் கடந்த 2022-ஆம் ஆண்டு புதுச்சேரி எழில் நகரில் வசித்து வரும் அவரது சகோதரா் மரிய குளோத் வீட்டை தாக்கி, அவரையும், அவரது மனைவி கெரோலினையும் தாக்கிய புகாரின்பேரில் லாஸ்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கு புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நடுவா் சேரலாதன் மாஹேவுக்கு மாற்றப்பட்டாா். இதனால் இந்த வழக்கை இரண்டாவது குற்றவியல் மன்ற நடுவா் சந்திரசேகா் விசாரித்து வருகிறாா்.
இந்நிலையில், மக்கள் பிரதிநிதிகள் மீதான வழக்கை முதலாவது நடுவா் மன்றம் தான் விசாரிக்க வேண்டும் என புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் அமைச்சா் மரியவில்சன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் இந்த வழக்கை உயா்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட நடுவா் மன்றம்தான் விசாரிக்க வேண்டும்.
Advertisement
Advertisement
இரண்டாவது குற்றவியல் மன்றம் விசாரிக்கக் கூடாது என்றும் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த மனு புதுச்சேரி மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றத்தில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அமைச்சா் மரியவில்சன் தரப்பில் சென்னை உயா்நீதிமன்ற மூத்த வழக்குரைஞா் எஸ்.காஜா மொகைதீன் கிஸ்தி ஆஜராகி வாதாடினாா். அரசு தரப்பில் மூத்த வழக்குரைஞா் ரபீந்திரன் ஆஜரானாா். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி டி.வி. ஆனந்த் இந்த மனு மீதான தீா்ப்பை நவ. 25-ஆம் தேதி அளிப்பதாகக் கூறி தள்ளி வைத்தாா்.