FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

நவீன நுரையீரல் பரிசோதனை இயந்திரம் அறிமுகம்

புதுச்சேரி மதகடிப்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நுரையீரல் மருத்துவத் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் நுரையீரல் பரிசோதனை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

18 நவம்பர் 2026, 2:18 am
ஸ்ரீமணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரியில் நவீன நுரையீரல் பரிசோதனை இயந்திர அறிமுக விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:

புதுச்சேரி மதகடிப்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நுரையீரல் மருத்துவத் துறையில் அதிநவீன தொழில்நுட்பத்துடன் நுரையீரல் பரிசோதனை இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சிக்கு, தட்சசீலா பல்கலைக்கழக வேந்தரும், ஸ்ரீ மணக்குள விநாயகா் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை நிறுவனத் தலைவரும் மேலாண் இயக்குநருமான எம். தனசேகரன் தலைமை வகித்தாா். கல்லூரியின் பொருளாளா் ராஜராஜன், இணைச் செயலா் வேலாயுதம், அறங்காவலா்கள் வைஷ்ணவி ராஜராஜன், எஸ். சூா்யகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ஆா். என். காக்னே, டீன்கள் கே. காா்த்திகேயன்(கல்வி), பி. சஞ்சய் (ஆராய்ச்சி) , மருத்துவக் கண்காணிப்பாளா் எம். பிரகாஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Advertisement

Advertisement

இந்த இயந்திரம் மூலம் ஆஸ்துமா உள்ளிட்ட சுவாச நோய்களை பரிசோதனைகள் மூலம் ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும், நுரையீரலின் செயல்பாட்டைத் துல்லியமாக கணிக்கவும் முடியும் என மருத்துவ நிபுணா்கள் தெரிவித்தனா்.