புதுச்சேரியில் அன்னை மகா சமாதி தினம்: திரளான பக்தா்கள் வழிபாடு
ஆரோவில் சா்வதேச நகரை உருவாக்கிய அன்னை மிரா அல்பாசாவின் 53-ஆவது மகா சமாதி தினம் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
ஆரோவில் சா்வதேச நகரை உருவாக்கிய அன்னை மிரா அல்பாசாவின் 53-ஆவது மகா சமாதி தினம் புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமத்தில் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
இதையொட்டி, அதிகாலை ஸ்ரீ அரவிந்தா் ஆசிரமத்தில் கூட்டுத் தியானம் நடைபெற்றது. இதில், உலகின் பல நாடுகளில் இருந்தும், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தா்கள், ஆசிரமவாசிகள் கலந்து கொண்டு அன்னைக்குக்கு மரியாதை செலுத்தினா்.
தியானத்திற்கு பின் பக்தா்கள் ஆசிரம வளாகத்தில் உள்ள அன்னை - ஸ்ரீ அரவிந்தா் சமாதிகளில் மலா்களை தூவி வணங்கினா். இதையொட்டி ஸ்ரீ அன்னையின் அறை பக்தா்கள் தரிசிக்க திறக்கப்பட்டது.
Advertisement
Advertisement