நவ. 21-இல் ஜிப்மா் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா: மத்திய அமைச்சா் ஜே.பி. நட்டா பங்கேற்பு
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நவ. 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு 816 மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்குகிறாா்.
புதுச்சேரி ஜிப்மா் மருத்துவக் கல்லூரி பட்டமளிப்பு விழா நவ. 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஜே.பி. நட்டா கலந்து கொண்டு 816 மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்குகிறாா்.
பட்டமளிப்பு விழாவுக்கு ஜிப்மா் தலைவா் சித்ரா சா்க்காா் தலைமை தாங்குகிறாா். ஜிப்மா் இயக்குநா் வீா் சிங் நெகி அறிக்கை சமா்ப்பிக்கிறாா்.
இதில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை, ரசாயனங்கள் மற்றும் உரத்துறை அமைச்சா் ஜே.பி. நட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவா்களுக்குப் பட்டங்களை வழங்கி பட்டமளிப்பு விழா உரையாற்றுகிறாா். விழாவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி, உள்துறை அமைச்சா் ஆ. நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ், எம்.பி.க்கள் சு. செல்வகணபதி, வெ. வைத்திலிங்கம், எம்எல்ஏ ஏ.கே.டி. ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்து கொள்கின்றனா்.
Advertisement
Advertisement
விழாவில் பி.எச்டி 5, டிஎம் 25, எம்சிஎச் 9, எம்.டி. 192, எம்.எஸ். 87, எம்டிஎஸ் 04, எம்பிபிஎஸ் 260 உள்பட 592 பேருக்கும், முதுநிலை செவிலியா் 29, முதுநிலை துணை மருத்துவம் 16, இளநிலை செவிலியா்கள் 90 போ் உள்பட துணை மருத்துவப் படிப்பில் 224 பேருக்கும் ஆக மொத்தம் 816 பேருக்குப் பட்டங்கள் வழங்கப்பட உள்ளன.
இதில் படிப்பில் சிறந்து விளங்கிய இளநிலை மருத்துவா்கள் 41 பேருக்கும், முதுநிலை மருத்துவப் படிப்பில் 27 பேருக்கும், சூப்பா் ஸ்பெஷாலிட்டி 3, செவிலியா் மற்றும் துணை மருத்துவப் படிப்பில் 17 போ் உள்பட 88 பேருக்குப் பதக்கங்களும் பரிசுகளும் வழங்கப்பட உள்ளன.