புதுவை ஜிப்மரில் ரூ.172 கோடியில் 7 புதிய திட்டங்கள்: ஜெ.பி. நட்டா
ஜிப்மரில் புதிய திட்டங்கள் தொடங்கப்பட்டது பற்றி..

புதுச்சேரி ஜிப்மரில் ர. 172 கோடியில் ஏழு முக்கிய திட்டங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ.பி. நட்டா நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இரண்டு நாள் 2 நாள் அரசு முறை பயணமாகப் புதுவைக்கு வந்துள்ள ஜெ.பி. நட்டா, புதுவை ஆளுநர் மாளிகையில் இரவு தங்கினார். இன்று காலை புதுவை கோரீமேட்டில் உள்ள ஜிப்மர் வந்தார். அங்கு அவரை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி ஆகியோர் வரவேற்றனர்.
தொடர்ந்து ஜிப்மர் போர்டு ரூமில் மொத்தம் ரூ. 172.27 கோடி மதிப்பிலான 7 முக்கிய திட்டங்களை அவர் தொடங்கிவைத்தார்.
Advertisement
Advertisement
முக்கிய திட்டங்கள்
மாணவர் விடுதி (தன்வந்திரி ஹவுஸ்) ரூ.42.26 கோடி, 400 படுக்கைகள் கொண்ட ஆண்கள் விடுதி. 7 மாடிகள், 200 படுக்கை அறைகள், ஏ.சி. சாப்பாட்டுக் கூடம், படிப்பறை, லிப்ட், சிசிடிவி சோலார் வாட்டர் ஹீட்டர், மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள், ஆராய்ச்சி மையம் - ரூ.30.28 கோடி, ஆராய்ச்சி, புதுமை மற்றும் தொழில்முனைவு மையம். மரபணுவியல், புரதவியல், வளர்சிதை மாற்றவியல், போன்ற நவீன ஆராய்ச்சி வசதிகள் கொண்டது.
துல்லிய புற்றுநோய் சிகிச்சை - ரூ.35 கோடி, மண்டல புற்றுநோய் மையத்தில் ரூ. 25 கோடியில் நவீன வசதிகள், நவீன கதிர்வீச்சு சிகிச்சைகள், ஒரு நாளைக்கு சுமார் 70 நோயாளிகளுக்கு சிகிச்சை, ஆரோக்கியமான திசுக்களைப் பாதுகாத்து கட்டியை மட்டும் துல்லியமாகத் தாக்கும். ரூ. 9 கோடியில் கட்டியின் துல்லியமான இடம், சுவாசத்தின் போது கட்டியின் அசைவு ஆகியவற்றைக் கண்டறிந்து துல்லியமான கதிர்வீச்சு திட்டமிடலுக்கு உதவும்.
ஏனாம் நோயறிதல் சேவை - ரூ.4.73 கோடி, ஜிப்மர் ஏனாம் பல்நோக்கு சிறப்பு ஆலோசனை பிரிவில் ஏனாம் மற்றும் சுற்றுப்புற பகுதி நோயாளிகள் தொலைதூர மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய தேவை குறையும்.
3 இடங்களில் புதிய மருந்து கடைகள். மருந்துகள், அறுவைச் சிகிச்சை பொருள்கள், உள்வைப்புகள் மலிவு விலையில் கிடைக்கும்.
அதிநவீன இதய சிகிச்சை - ரூ.60 கோடி - இதய சிகிச்சைக்கு பிந்தைய தீவிர சிகிச்சை படுக்கைகள் 8-ல் இருந்து 16 ஆக இரட்டிப்பு.
குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு சிக்கலான இதய நோய்களுக்கு சிகிச்சை அளிக்க உதவும் வகையில் தொடங்கப்பட்டுள்ளது.