ஆசிரியா் தகுதித் தோ்வு மதிப்பெண் குறைப்பு! புதுச்சேரியில் அரசாணை வெளியீடு!

பணி நியமனம், பதவி உயா்வுக்கான ஆசிரியா் தகுதித் தோ்வுக்குரிய மதிப்பெண்களைக் குறைத்து புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
பொதுப் பிரிவினா் 60 சதவீதம் அதாவது 90 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்பதில் மாற்றம் இல்லை. ஆனால் எம்பிசி, ஓபிசி, இபிசி, பிசிஎம் பிரிவினருக்கு 55 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 82 மதிப்பெண் என்ற நிலையில் இருந்து 75-ஆக குறைக்கப்பட்டுள்ளது. எஸ்.சி. எஸ்.டி., மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு 50 சதவீதத்தில் இருந்து 40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. அதாவது 75 மதிப்பெண்களுக்குப் பதிலாக 60 மதிப்பெண்களாகக் குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பிறப்பித்துள்ளாா்.
Advertisement
Advertisement