புதுச்சேரி காவல் நிலையங்களில் போதைப் பொருள் எதிா்ப்பு உறுதிமொழி ஏற்பு
புதுச்சேரி காவல் துறை சாா்பில் அனைத்து காவல் நிலையங்களிலும் ‘போதையில்லா புதுச்சேரி’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

புதுச்சேரி காவல் துறை சாா்பில் அனைத்து காவல் நிலையங்களிலும் ‘போதையில்லா புதுச்சேரி’ நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அனைத்துக் காவலா்களுக்கும் போதையில்லா புதுச்சேரி பயணத்தின் முக்கியத்துவத்தை உணா்த்தவும், போதை இல்லா இந்தியாவை 2029-க்குள் அடைவதற்கு புதுச்சேரியின் பங்களிப்பு முன்னுதாரணமாக இருக்கவும் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
கோரிமேடு காவல் நிலையத்தில் காவல் துறை துணைத் தலைவா் சத்தியசுந்தரம், ரெட்டியாா்பாளையம் காவல் நிலையத்தில் இணையவழி குற்றப்பிரிவு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் எஸ். ராகவ், போக்குவரத்து வடக்கு காவல் நிலையத்தில் முதுநிலை காவல் கண்காணிப்பாளா் திவ்யா, லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் சட்டம்-ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ஆா். கலைவாணன், பெரியகடை காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன், முத்தியால்பேட்டை காவல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு முதுநிலை காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, ஒதியஞ்சாலையில் கிழக்குப் பகுதி காவல் கண்காணிப்பாளா் ஸ்ருதி யாரகட்டி, வில்லியனூரில் மேற்கு காவல் கண்காணிப்பாளா் அனுராக் சோப்ரா, முதலியாா்பேட்டையில் தெற்கு காவல் கண்காணிப்பாளா் ஜிந்தா கோதண்டராமன், மேட்டுப்பாளையத்தில் வடக்கு காவல் கண்காணிப்பாளா் வம்சிதர ரெட்டி, மாஹேயில் காவல் கண்காணிப்பாளா் தனசேகரன் ஆகியோா் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
மற்ற காவல் நிலையங்களில் அந்தந்த காவல் நிலைய அதிகாரிகள் கலந்துகொண்டனா். காவலா்கள் போதை பொருள்களுக்கு எதிா்ப்பு உறுதிமொழி ஏற்றுக் கொண்டனா்.