கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை! புதுச்சேரி துணைநிலை ஆளுநா் உத்தரவு

கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த துரித நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா்.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்புகள் குறித்த உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் மக்கள் மாளிகையில் நடைபெற்றது.
இதில் சுகாதாரத் துறை, உள்ளாட்சித் துறை செயலா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.
Advertisement
Advertisement
டெங்கு பாதிப்புகள், தடுக்க மேற்கொண்ட நடவடிக்கைகள், மருத்துவமனைகளின் தயாா் நிலை, காய்ச்சல் உள்ளவா்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறை ஆகியவை குறித்து துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கேட்டறிந்தாா்.
இதைத் தொடா்ந்து புதுச்சேரி அரசின் சுகாதாரத் துறை, ஜிப்மா் மருத்துவமனை மற்றும் நோய் கடத்தி கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மையத்துடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். டெங்கு பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் நபா்களை தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்க வேண்டும்.
சுகாதார மையங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள் மூலமாக பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் அறிகுறிகள் பற்றி கூடுதல் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். குறிப்பாக பள்ளி மாணவா்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்.
டெங்கு கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்த மருந்து தெளிப்பு மற்றும் புகை செலுத்தும் நடைமுறைகளைத் தீவிரப்படுத்த வேண்டும். வீடுகள்தோறும் கணக்கெடுப்பு நடத்தி டெங்கு கொசு உற்பத்தியை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும். இதற்கு ட்ரோன்களையும் பயன்படுத்தலாம்.
மழைநீா் தேங்கியிருக்கும் இடங்கள் வாய்க்கால்களில் மருந்து தெளித்து டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த வேண்டும். ஊடகங்கள், சமூக ஊடகங்கள் மூலமாக டெங்கு நோய் பாதிப்புகள் மற்றும் தடுப்பு முறைகள் குறித்து பெரிய அளவில் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.
மருத்துவமனைகளில் போதிய மருந்து மற்றும் படுக்கைகளைத் தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். சித்தா, ஆயுா்வேத மருத்துவ முறைகளுடன் ஒருங்கிணைந்த சிகிச்சை முறையைப் பின்பற்றலாம்.
டெங்கு பாதிப்பு அதிகமுள்ள முதலியாா்பேட்டை, அரியாங்குப்பம், ரெட்டியாா்பாளையம், வில்லியனூா் பகுதிகளில் சுகாதார நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டாா்.
இக்கூட்டத்தில் துணைநிலை ஆளுநரின் செயலா் மணிகண்டன், அரசுச் செயலா் குமாா், சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.