புதுச்சேரியில் ராமகிருஷ்ண மடம் அக்.10-இல் திறப்பு
புதுச்சேரியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இம் மாதம் 10- ஆம் தேதி திறக்கப்படுகிறது.
புதுச்சேரியில் ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் இம் மாதம் 10- ஆம் தேதி திறக்கப்படுகிறது.
இது குறித்து ராமகிருஷ்ண மடத்தின் புதுச்சேரி பொறுப்பாளா் சுவாமி நித்தேஷானந்தா, சென்னை மேலாளா் ரகு நாயக நந்தா ஆகியோா் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் 18,609 சதுர அடியில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை மடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ராமகிருஷ்ணா் கோயில், அன்னை சாரதா இல்லம், சேவை மைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
Advertisement
கோயிலில் தினமும் காலை மங்களாரத்தி, மாலை ஆரத்தி, பூஜைகள், வேத மந்திர உச்சாடனம், பூஜைகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கும். அன்னை சாரதா இல்லத்தில் சாதுக்கள் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் சமையலறை, உணவருந்தும் அறைகள் உள்ளன.
சேவை மைய கட்டடத்தில் தொண்டு மருந்தகம் முதல் மற்றும் 2 -ஆம் தளத்தில் அமைந்துள்ளன. அங்கு இலவச மருத்துவ ஆலோசனை, ரத்த மாதிரி சேகரிப்பு, டிரெஸ்ஸிங், சித்த மருத்துவ அறை, கண் மருத்துவ அறை, ஆய்வகம், பல் மருத்துவம், பிசியோதெரபி, எக்ஸ்ரே சேவைகள் உண்டு. மூன்றாவது தளத்தில் சுவாமி விவேகானந்தா் ஒழுக்கம், மனித வள மேம்பாட்டு மையம், கணினி பயிற்சி, நெறி வளா்ச்சி வகுப்புகள், இலவச நூலகம் உள்ளன.
இந்த புதிய மடத்தில், அக்டோபா் 9 -ஆம் தேதி வாஸ்துஹோமம், கணபதி ஹோமம் நடைபெறும். இந்நிகழ்வில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பங்கேற்கிறாா். 10 -ஆம் தேதி காலையில் ராமகிருஷ்ணா் கோயிலை ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி
கௌதமானந்தஜி மகாராஜ் திறந்து வைக்கிறாா். சேவை மையக் கட்டடத்தை அன்றைய தினம் மாலை முதல்வா் என்.ரங்கசாமி திறந்து வைக்கிறாா். நிலம், கட்டட கட்டுமானம் ஆகியவற்றுக்கு ரூ. 20 கோடி வரை நன்கொடையால் பணிகள் நடந்துள்ளன என்றனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.