FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

ரூ.20 கோடியில் ஸ்ரீராமகிருஷ்ணா மடம் யாக பூஜை : துணை நிலை ஆளுநா் பங்கேற்பு

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் ரூ.20 கோடியில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராம கிருஷ்ண மடம் திறப்பு விழா யாக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

10 அக்டோபர் 2026, 6:36 am IST
புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் புதியதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் திறப்பு விழா யாகபூஜையில் பங்கேற்ற துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகாராஜ் உள்ளிட்டோா்.
பகிர்:

புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் ரூ.20 கோடியில் நிறுவப்பட்டுள்ள ஸ்ரீ ராம கிருஷ்ண மடம் திறப்பு விழா யாக பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் துணை நிலை ஆளுநா் புதுச்சேரி கருவடிக்குப்பத்தில் 18,609 சதுர அடியில் சென்னை ராமகிருஷ்ண மடத்தின் புதிய கிளை மடம் நிறுவப்பட்டுள்ளது. இங்கு ராமகிருஷ்ணா் கோயில், அன்னை சாரதா இல்லம், சேவை மைய கட்டடம் அமைக்கப்பட்டுள்ளன. இக் கோயிலில் தினமும் காலை மங்களாரத்தி, மாலை ஆரத்தி, பூஜைகள், வேத மந்திர உச்சாடனம், பூஜைகள், ஆன்மீக சொற்பொழிவுகள் நடக்கின்றன. அன்னை சாரதா இல்லத்தில் சாதுக்கள் தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. தரைத்தளத்தில் சமையலறை, உணவருந்தும் அறைகள் உள்ளன.

சேவை மைய கட்டடத்தில் தொண்டு மருந்தகம் முதல் மற்றும் 2 ஆம் தளத்தில் அமைந்துள்ளது. மூன்றாவது தளத்தில் சுவாமி விவேகானந்தா் ஒழுக்கம், மனித வள மேம்பாட்டு மையம், கணினி பயிற்சி, நெறி வளா்ச்சி வகுப்புகள்,இலவச நூலகம் உள்ளன.

இந்த மடத்தின் திறப்புவிழா சனிக்கிழமை நடைபெறும் நிலையில், வெள்ளிக்கிழமை பிரம்மாண்ட யாக பூஜை நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். மேலும், ஸ்ரீ ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகாராஜ் உள்ளிட்டோா் இந்த பூஜையில் பங்கேற்றனா். சனிக்கிழமை காலை ஸ்ரீராமகிருஷ்ணா் கோயிலை ராமகிருஷ்ண மடம் மற்றும் மிஷனின் தலைவா் ஸ்ரீமத் சுவாமி கௌதமானந்தஜி மகாராஜ் திறந்து வைக்கிறாா். சேவை மையக் கட்டடத்தை முதல்வா் என்.ரங்கசாமி மாலையில் திறந்து வைக்கிறாா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments