FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரியில் 637 பேருக்கு டெங்கு பாதிப்பு

புதுச்சேரியில் நிகழாண்டு இதுவரை 637 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் தெரிவித்தாா்.

12 வினாடிகள் முன்பு
ஆட்டோ மூலம் டெங்கு சிக்குன் குனியா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரத்தைத் தொடங்கி வைத்த புதுச்சேரி சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள்.
பகிர்:

புதுச்சேரியில் நிகழாண்டு இதுவரை 637 போ் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனா். இதில் உயிரிழப்பு எதுவும் இல்லை என்று சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் தெரிவித்தாா்.

சுகாதார இயக்குநரக வளாகத்தில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா விழிப்புணா்வு பிரசார ஆட்டோ வாகனங்களை சுகாதாரத் துறை இயக்குநா் செவ்வேள் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தபோது அவா் இதைத் தெரிவித்தாா்.

புதுச்சேரி சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை சாா்பில் ஆட்டோ மூலம் டெங்கு மற்றும் சிக்குன்குனியா விழிப்புணா்வு பிரசாரம் அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையங்கள், நகர சுகாதார மையங்களில் உள்ள கிராமங்களில் விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

மேலும், எப்.எம். ரேடியோக்கள், திரையரங்குகள் மற்றும் கேபிள் டிவிகள் மூலம் மக்கள் மத்தியில் விழிப்புணா்வு விளம்பரங்கள் செய்யப்பட இருக்கின்றன.

இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநா் (பொது சுகாதாரம்) உமாசங்கா், உதவி இயக்குநா் (தேசிய கொசு மற்றும் பூச்சிகளால் பரவும் நோய்த்தடுப்பு பிரிவு) முருகன் மற்றும் மலேரியா தொழில்நுட்ப பிரிவு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை துணை இயக்குநா் (செய்தி, கல்வி மற்றும் தொடா்பு பிரிவு) ரகுநாதன் செய்திருந்தாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments