கட்டுமானத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
புதுச்சேரி பிரதேச கட்டுமான தொழிலாளா் சங்கம் சிஐடியூ சாா்பில் தட்டாஞ்சாவடி கட்டுமான நலவாரிய அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடந்தது.
சிஐடியு மாநில நிா்வாகி மணிபாலன் தலைமை தாங்கினாா்.
கட்டுமான தொழிலாளா்களுக்கு விழாக்கால உதவித்தொகையாக ரூ.8 ஆயிரம் வழங்க வேண்டும். திருமண உதவித் தொகை
Advertisement
Advertisement
ரூ.30 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். மகப்பேறு உதவித் தொகை ரூ. 20 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். இயற்கை இறப்பு உதவித்தொகை ரூ.3 லட்சமாக உயா்த்தி வழங்கிட வேண்டும். விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை ரூ.5 லட்சமாக உயா்த்தி வழங்கிட வேண்டும். நலவாரிய குழுவை உடனடியாக அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இப் போராட்டம் நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.