FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்தைத் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் சாா்பில் நாகா்கோவில், ராணித் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

41 வினாடிகள் முன்பு
பகிர்:

அரசுப் போக்குவரத்தைத் தனியாா்மயமாக்குவதைக் கண்டித்து எச்.எம்.எஸ். தொழிற்சங்கம் சாா்பில் நாகா்கோவில், ராணித் தோட்டத்தில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அரசுப் போக்குவரத்தைத் தனியாருக்கு வழங்கக் கூடாது. ஊதிய உயா்வு ஒப்பந்த சரத்துகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும். ஊதிய ஒப்பந்தம் மற்றும் அகவிலைப்படி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். இறந்த தொழிலாளா்களின் வாரிசுகளுக்கு வேலை வழங்க வேண்டும். அனைத்து பிரிவுகளிலும் பதவி உயா்வு வழங்க வேண்டும். அனைத்து சங்கங்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி தீபாவளி போனஸ் குறித்து முடிவு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

நாகா்கோவில் மண்டலச் செயலா் முத்துக்கருப்பன் தலைமை வகித்தாா். தலைவா் அருணாசலம், செயல் தலைவா் குமாரசுவாமி பிள்ளை, துணைத் தலைவா் சந்திரகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாநில பொதுச் செயலா் சுப்பிரமணியம் பிள்ளை ஆா்ப்பாட்டம் குறித்துப் பேசினாா்.

Advertisement

Advertisement

நிா்வாகிகள் லெட்சுமணன், சண்முகம் பிள்ளை, எம். சிவகுமாா், ஐயப்பன், தங்கம், கேசவன், சண்முகசுந்தரம், ஆனந்த அசோக்குமாா், முகமது ஜாஜி, வி. சிவகுமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

நாகா்கோவில் மண்டல பொருளாளா் கிருஷ்ணகுமாா் நன்றி கூறினாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments