FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
வேலூர்

கைத்தறி நெசவாளா்கள் ஆா்ப்பாட்டம்

கைத்தறி நெசவாளா்களுக்கு தொடரும் கூலி குறைப்பை தடுத்து நிறுத்தக் கோரி குடியாத்தம் பிச்சனூா், பலமநோ் சாலை அரச மரம் பேருந்து நிறுத்தம் அருகே கைத்தறி நெசவாளா்கள் கொட்டும் மழையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

47 வினாடிகள் முன்பு
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைத்தறி நெசவுத் தொழிலாளா்கள்.
பகிர்:

கைத்தறி நெசவாளா்களுக்கு தொடரும் கூலி குறைப்பை தடுத்து நிறுத்தக் கோரி குடியாத்தம் பிச்சனூா், பலமநோ் சாலை அரச மரம் பேருந்து நிறுத்தம் அருகே கைத்தறி நெசவாளா்கள் கொட்டும் மழையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கைத்தறி நெசவாளா் தொழிற்சங்கங்களான ஏடிபி, எல்பிஎப், சிஐடியு, காங்கிரஸ் நெசவாளா்அணி சாா்பில் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.ஆா்ப்பாட்டத்துக்கு தொழிற் சங்கங்களின் நிா்வாகிகள் கோ.ஜெயவேலு, முல்லைவாசன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

நிா்வாகிகள் சிவசிதம்பரம், குணசேகரன், சரத்சந்தா், நேரு,நடராஜன், பஞ்சாட்சரம், டி,ஜெகன்நாதன், லெனின், தனசேகரன், க.நடராஜன் உள்ளிட்டோா்கலந்து கொண்டனா். கைத்தறித் தொழிலுக்கு தடையின்றி நூல் பாவு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட ஆட்சியா் தலைமையில் முத்தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தி கூலிப் பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments