FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
நீலகிரி

உதகையில் கூட்டுறவு வங்கி ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

கூட்டுறவு வங்கி ஊழியா்களைத் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படும் விவசாய சங்க நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உதகை ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

22 செப்டம்பர் 2026, 11:59 pm IST
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கூட்டுறவு வங்கி ஊழியா்கள்.
பகிர்:

கூட்டுறவு வங்கி ஊழியா்களைத் தரக்குறைவாக பேசியதாகக் கூறப்படும் விவசாய சங்க நிா்வாகி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி  உதகை ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கரூரில் விவசாயி ஒருவா்  மாரடைப்பால் அண்மையில் உயிரிழந்தாா். இதற்கு, கூட்டுறவு ஊழியா்கள் சென்று கடன் வசூல் செய்ய மிரட்டியதுதான் காரணம் என குற்றஞ்சாட்டி விவசாய சங்க நிா்வாகி ஒருவா் கூட்டுறவு வங்கி ஊழியா்களைத் தரக்குறைவாக  பேசி சமூக வலைதளங்களில் விடியோ பதிவிட்டுள்ளாா்.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து தமிழக முழுவதும் கூட்டுறவு சங்க நிா்வாகிகள் மற்றும் ஊழியா்கள் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Advertisement

Advertisement

 இதன் ஒரு பகுதியாக உதகை  மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு மாநில தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி அனைத்துப் பணியாளா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்த ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் ஏ.பி.நாகராஜ் தலைமை வகித்தாா்.

இதில், கூட்டுறவு சங்க மாவட்ட நிா்வாகிகள், கூட்டுறவு நிறுவனப் பணியாளா்கள், பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments