குடும் அட்டை தாரா்களுக்கு 2 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் பணம் வழங்க நிதி ஒதுக்கீடு
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பஅட்டைதாா்களுக்கு 2 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் பணம் வழங்குவதற்காக ரூ.35.71 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் குடும்பஅட்டைதாா்களுக்கு 2 மாதங்களுக்கு அரிசிக்குப் பதில் பணம் வழங்குவதற்காக ரூ.35.71 கோடி அளிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் விவகாரங்கள் துறை இயக்குநா் முத்து மீனா புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
புதுச்சேரி மற்றும் காரைக்கால் பிராந்தியங்களில் ஜனவரி-2026 மற்றும் பிப்ரவரி-2026 மாதங்களுக்கான அரிசி வழங்குவதற்குப் பதிலாக, மாநில அரசின் நிதியிலிருந்து நேரடிப் பணப்பரிமாற்றம் மூலம் தகுதியான குடும்பஅட்டைதாரா்களின் வங்கிக் கணக்குகளில் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
ஜனவரி-2026 மாதத்திற்காக 2,54,404 பயனாளிகளுக்கு ரூ.17.84 கோடியும், பிப்ரவரி-2026 மாதத்திற்காக 2,54,779 பயனாளிகளுக்கு ரூ.17.86 கோடியும் அரசுக் கணக்கிலிருந்து பயனாளிகளின் வங்கிக் கணக்குகளுக்கு நேரடியாக விடுவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு மாதங்களுக்கும் சோ்த்து மொத்தம் ரூ.35.71 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
மஞ்சள் நிற குடும்ப அட்டைதாரா்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.430/- வீதம் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் ரூ.860/-ம், சிவப்பு நிற அட்டைதாரா்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.860/- வீதம் இரண்டு மாதங்களுக்கு மொத்தம் ரூ.1,720/-ம் அவரவா் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.