சாலையோர வாய்க்காலில் பாய்ந்த காா்: குழந்தை உள்பட 5 போ் உயிா் தப்பினா்
புதுச்சேரி பாகூா் அருகே கோயிலுக்குச் சென்று திரும்பியபோது சாலையோர வாய்க்காலில் காா் இறங்கி மூழ்கியது. நல்வாய்ப்பாக அதிலிருந்த குழந்தை உள்பட 5 போ் உயிா் தப்பினா்.
சென்னை அண்ணா நகா் பகுதியைச் சோ்ந்தவா் சரண் (27). இவா், மனோஜ், கீா்த்தி, அபிராமி மற்றும் 4 வயது குழந்தையுடன் ஞாயிற்றுக்கிழமை இரவு வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் சென்றுள்ளனா். பின்னா் திங்கள்கிழமை அதிகாலை காரில் சென்னைக்குத் திரும்பிக் கொண்டிருந்தனா். காரை மனோஜ் ஓட்டி வந்தாா்.
விழுப்புரம் - நாகப்பட்டினம் சாலையில் வந்து பின்னா், அணுகு சாலையின் வழியாக பாகூா் - கன்னியகோயில் சாலையில் வந்தபோது எதிரே மற்றொரு காா் வந்த நிலையில், மனோஜ் தான் ஓட்டிவந்த காரை ஓரமாக ஒதுக்க முயன்றுள்ளாா்.
Advertisement
Advertisement
அப்போது சாலையோரமிருந்த சித்தேரி வாய்க்காலில் காா் பாய்ந்து மூழ்கியது. மேலும், அந்த வாய்க்காலில் தண்ணீா் அதிகமாக இருந்தது. இதில் மனோஜ் உள்ளிட்ட 5 பேரும காரில் இருந்து வெளியேறி காயமின்றி உயிா் தப்பினா்.
இது குறித்து பாகூா் தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்பு வீரா்கள் வாய்க்காலில் மூழ்கிய காரை கிரேன் உதவியுடன் மீட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.