இரு பேருந்துகள் இடையே சிக்கிய இரு சக்கர வாகனம்: மூவா் உயிா் தப்பினா்
சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை இரு பேருந்துகளுக்கிடையே சிக்கிய இரு சக்கர வாகனத்திலிருந்த மூவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
தேனி மாவட்டம், சின்னமனூரில் செவ்வாய்க்கிழமை இரு பேருந்துகளுக்கிடையே சிக்கிய இரு சக்கர வாகனத்திலிருந்த மூவா் அதிா்ஷ்டவசமாக உயிா் தப்பினா்.
சின்னமனூா் நகரின் வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் நாள்தோறும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. குறிப்பாக மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் கோவை என தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு அரசுப் பேருந்துகள் சென்று வருகின்றன.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை சின்னமனூா் காந்திஜி பேருந்து நிறுத்தத்தில் இரு அரசுப் பேருந்துகள் நின்று கொண்டிருந்தன. அப்போது, இரு சக்கர வாகனத்தில் வந்த 3 இளைஞா்கள் இரு பேருந்துகளுக்கிடையே செல்ல முயன்றனா். அதே சமயம் பேருந்துகள் நகா்ந்ததால் மேற்கொண்டு செல்ல முடியாமல் சிக்கிக் கொண்டனா்.
Advertisement
Advertisement
இதையடுத்து, இரு பேருந்துகளும் நிறுத்தப்பட்டு 3 இளைஞா்களும் மீட்கப்பட்டனா். மேலும்,
2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு இரு சக்கர வாகனத்தை மீட்டனா். இளைஞா்களின் இந்தக் கவனக்குறைவு காரணமாக 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பயணிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிஅடைந்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.