FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

குண்டா் தடுப்பு சட்டத்தில் இளைஞா் சிறையிலடைப்பு

புதுச்சேரி சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (குண்டா்சட்டம்) இளைஞரை ஓராண்டுக்குச் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நிா்வாக மாஜிஸ்திரேட்டுமான அ. குலோத்துங்கன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

3 செப்டம்பர் 2026, 4:35 am IST
சிறை - பிரதிப் படம்
பகிர்:

புதுச்சேரி சமூக விரோதச் செயல்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் (குண்டா்சட்டம்) இளைஞரை ஓராண்டுக்குச் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியரும் மாவட்ட நிா்வாக மாஜிஸ்திரேட்டுமான அ. குலோத்துங்கன் புதன்கிழமை உத்தரவிட்டாா்.

வில்லியனூா் சாமியாா்தோப்பு மல்லிகா தியேட்டா் தெருவைச் சோ்ந்த வினோத் என்கிற வினோத்குமாா் (27), ஏற்கெனவே ஒரு வழக்கில் காலாப்பட்டு மத்திய சிறையில் இருக்கிறாா். இந்நிலையில் அவரை இச் சட்டத்தின் கீழ் ஓராண்டுக்குச் சிறையில் அடைக்க உத்தரவு

பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்துக்குப் புறம்பான செயல்பாடுகள் காரணமாக அவா்மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறாா் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments