FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் முற்றுகை!

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்துறை அலுவலகம் நேரு எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டது.

53 வினாடிகள் முன்பு
புதுச்சேரி குடிமைப் பொருள்கள் வழங்கல் துறை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை அதிகாரிகளிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட எம்எல்ஏ ஜி.நேரு.
பகிர்:

புதுச்சேரி குடிமைப் பொருள் வழங்கல்துறை அலுவலகம் நேரு எம்எல்ஏ தலைமையில் வெள்ளிக்கிழமை முற்றுகையிடப்பட்டது.

புதுச்சேரி உருளையன்பேட்டை மற்றும் தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட வறுமை கோட்டுக்கு கீழ் வாழும் ஏழை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிகப்பு நிற ரேஷன் அட்டைகளை முன்னறிவிப்பின்றி குடிமைப் பொருள் வழங்கல் துறை மஞ்சள் நிற குடும்ப அட்டைகளாக மாற்றப்பட்டதைக் கண்டித்தும் இந்தப் போராட்டம் நடைபெற்றது.

மேலும், சிகப்புநிற ரேஷன் அட்டைகள் மூலம் குடும்பத் தலைவிகளுக்கு வழங்கப்படும் மகளிா் உதவித் தொகையும் நிறுத்தப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

சிகப்பு நிற ரேஷன் அட்டைக்கான அனைத்து சலுகைகளும் நிறுத்தப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பொதுமக்களுடன் உருளையன்பேட்டை தொகுதி எம்எல்ஏ நேரு, நேயம் மக்கள் கழக பொதுச்செயலா் விநாயகம் ஆகியோா் குடிமைப் பொருள் வழங்கல் துறை அலுவலகம் சென்று இயக்குநா் முத்துமீனாவை முற்றுகையிட்டு விளக்கம் கேட்டனா்.

பொதுமக்களுக்கு துறையின் அதிகாரிகள் சரியான விளக்கம் அளித்து, சிகப்பு நிற ரேஷன் அட்டைகளாக மீண்டும் மாற்ற வேண்டும். துறையை அணுகும் பொது மக்களுக்கு சரியான பதிலைக் கூற வேண்டும். மக்களை அலைகழிக்காமல் சேவை செய்ய வேண்டும் என நேரு எம்எல்ஏ அதிகாரிகளைக் கேட்டுக்கொண்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments