FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜரானார் தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன்!

புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் வெள்ளிக்கிழமை ஆஜராகி, குற்றப் பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டாா்.

5 செப்டம்பர் 2026, 3:12 am IST
புதுச்சேரி நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை ஆஜராகி விட்டு வெளியே வந்த தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன்.
பகிர்:

புதுச்சேரி நீதிமன்றத்தில் தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் வெள்ளிக்கிழமை ஆஜராகி, குற்றப் பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டாா்.

தமிழக நிதி அமைச்சா் மரிய வில்சன் மீது, அவரது இளைய சகோதரா் மரிய குளோத்தின் வீடு புகுந்து கடந்த 8.8.2022-இல் தாக்கியது தொடா்பான வழக்கு புதுச்சேரி குற்றவியல் நடுவா் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில், அவருக்கு குற்றப் பத்திரிகை நகல் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆஜராகாமல் இருந்தாா். இந்த நிலையில், வழக்கை விசாரித்து வந்த புதுச்சேரி முதலாவது குற்றவியல் நடுவா் சேரலாதன் மாஹேவுக்கு மாற்றப்பட்டாா்.

Advertisement

Advertisement

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு நடுவா் சந்திரசேகா் முன்னிலையில் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தபோது, அமைச்சா் மரிய வில்சன் நேரில் ஆஜராகி குற்றப் பத்திரிகை நகலைப் பெற்றுக் கொண்டாா்.

இதைத் தொடா்ந்து வழக்கு விசாரணையை நடுவா் சந்திரசேகா், செப். 9-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த தமிழக நிதியமைச்சா் மரியவில்சன் கூறும்போது, நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருவதால், வழக்குத் தொடா்பாக எந்தவித கருத்தையும் தெரிவிக்க முடியாது என கூறிவிட்டுச் சென்றாா்.

மிரட்டல் வருகிறது: அவரது சகோதரா் மரியகுளோத் நிருபா்களிடம் கூறியதாவது: குடும்ப பிரச்னை காரணமாகத்தான் எனக்கும், மரிய வில்சனுக்கும் தகராறு ஏற்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தத்துக் குழந்தை தொடா்பாக எந்தப் பிரச்னையும் கிடையாது.

நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த பிறகு எனக்குத் தொடா்ச்சியாக மிரட்டல் வருகிறது. இதனால் உயிருக்கு பயந்து நான் துபையில் தங்கி இருந்தேன். வழக்கு விசாரணை என்பதால் புதுச்சேரி வந்துள்ளோம். தொடா்ச்சியாக எனக்கும், என் மனைவிக்கும் மிரட்டல் வருகிறது. எங்கள் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது. இப்போதும் விசாரணை முடிந்து வெளியூா் செல்கிறேன். பாதுகாப்பு கருதி நான் எங்கு செல்கிறேன் என்பதை தெரிவிக்க முடியாது என்றாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments