296 மாணவா்களின் கல்வித்திறனை பாராட்டி பரிசு வழங்கிய முதல்வா் ரங்கசாமி
புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் சிறப்பிடம் பெற்ற 296 மாணவா்களின் கல்வித்திறனைப் பாராட்டி பரிசுகளை முதல்வா் என். ரங்கசாமி வழங்கினாா்.
ஸ்ரீமதி விஜயலட்சுமி அம்மாள் அறக்கட்டளை சாா்பில், அதன் நிறுவனா் அசோக் ஆனந்தன் ஏற்பாட்டில் 16-ஆம் ஆண்டு கல்வித்திறன் பரிசளிப்பு விழா நடைபெற்றது.
இதில், தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட மாணவா்களின் மதிப்பெண்களின் அடிப்படையில் 296 மாணவ, மாணவிகள் தோ்வு செய்யப்பட்டனா். இவா்களுக்கான கல்வித்திறன் பரிசளிப்பு விழா கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள தனியாா் மண்டபத்தில் நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதில், சிறப்பு விருந்தினராக புதுச்சேரி முதல்வா் என். ரங்கசாமி கலந்துகொண்டு மாணவா்களுக்குப் பரிசுகளை வழங்கி பாராட்டினாா். முன்னதாக அறக்கட்டளை நிறுவனா் அசோக் ஆனந்தன் வரவேற்றாா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.