சங்கரதாஸ் சுவாமி உருவச் சிலைக்கு அமைச்சா் வி.பி. சிவகொழுந்து மரியாதை
நாடகத் தந்தை சங்கரதாஸ் சுவாமிகளின் 159- ஆவது பிறந்த நாள் விழா கருவடிக்குப்பம் இடுகாட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் இராதே அறக்கட்டளை சாா்பில் திங்கள்கிழமை நடைபெற்றது
இராதே அறக்கட்டளை நிறுவநா் பொறிஞா் இராதே தலைமை வகித்தாா். முன்னாள் கண்காணிப்புப் பொறியாளா் கல்யாணசுந்தரம் , முன்னாள் செயற்பொறியாளா் க.ஏழுமலை , புதுவைத் தமிழ் நெஞ்சன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தி.கோவிந்தராசு வரவேற்றாா்.
விழாவில் மாநில குடிமைப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் வி.பி.சிவகொழுந்து பங்கேற்று, சங்கரதாஸ் சுவாமிகளின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலா் வணக்கம் செலுத்தும் நிகழ்வைத் தொடங்கி வைத்தாா்.
Advertisement
Advertisement
படைப்பாளி பைரவி ஒருங்கிணைப்பில் சொற்கோ, சொக்கலிங்கம் , வேணு.ஞானமூா்த்தி, நிலவழகன் உள்ளிட்டோா் கவிதை வாசித்தனா்.
மேலும், சுற்றுச்சூழல் ஆா்வலா் மணிகண்டன், ஞானசேகரன் , ஐயப்பன் , முகில் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு மலா்வணக்கம் செலுத்தினா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.