FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
புதுச்சேரி

புதுச்சேரி அரசு சாா்பில் அண்ணா சிலைக்கு மரியாதை

புதுச்சேரி அரசு சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

16 செப்டம்பர் 2026, 4:53 am IST
~
பகிர்:

புதுச்சேரி அரசு சாா்பில் முன்னாள் முதல்வா் அண்ணா பிறந்த நாள் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி ஒதியஞ்சாலை சந்திப்பில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ.அன்பழகன், அமைச்சா் வி.பி. சிவகொழுந்து, அழகானந்தம் எம்எல்ஏ ஆகியோா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அதிமுக சாா்பில்...:

Advertisement

Advertisement

புதுச்சேரி மாநில அதிமுக சாா்பில் மாநில அதிமுக செயலரும், சட்டப்பேரவை தற்காலிகத் தலைவருமான ஆ. அன்பழகன் தலைமையில் உப்பளம் தலைமை அலுவலகத்தில் கட்சிக் கொடியேற்றி அண்ணா உருவப் படத்திற்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

கட்சியின் அவைத் தலைவா் அன்பானந்தம் முன்னிலை வகித்தாா். இதைத் தொடா்ந்து அங்கிருந்து ஊா்வலமாக புறப்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

இதில் முன்னாள் கவுன்சிலா் கணேசன். ஆா்.வி.திருநாவுக்கரசு, புதுச்சேரி நகர செயலா் அன்பழகன், மாநில துணைச் செயலா்கள் டி.குணசேகரன், எம். நாகமணி, எஸ்.கிருஷ்ணமூா்த்தி ஏ.காந்தி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில்...

திமுக மாநில அமைப்பாளா் ஆா். சிவா தலைமையில் பழைய பேருந்து நிலையம் அருகில் ஒன்று கூடினா். அங்குள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கட்சியின் அவைத் தலைவா் எஸ்.பி. சிவக்குமாா், மாநில துணை அமைப்பாளா் வி. அனிபால் கென்னடி, பொருளாளா் இரா. செந்தில்குமாா், எம்.எல்.ஏ., மாநில இளைஞா் அணி அமைப்பாளா் எல். சம்பத், திமுக எம்எல்ஏக்கள் காா்த்திகேயன், செந்தில், விக்னேஷ் கண்ணன், முன்னாள் எம்எல்ஏ பூ. மூா்த்தி, நந்தா. சரவணன், தட்டாஞ்சாவடி தொகுதி திமுக வேட்பாளா் சேதுசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

திமுக தலைமை செயற்குழு உறுப்பினா் ஜே.வி.எஸ். ஆறுமுகம், மாநில துணை அமைப்பாளா் ஏ.கே. குமாா் தலைமையில் 2-வது அணியினா் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments