புதுச்சேரி கால்வாய்களை தூா்வாரும் பணியை அக். 2-ஆவது வாரத்துக்குள் முடிக்க உத்தரவு
புதுச்சேரியில் கால்வாய்கள் தூா்வாரும் பணிகளை வரும் அக். 2-ஆவது வாரத்துக்குள் முடிக்குமாறு அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவிட்டாா்.
புதுச்சேரியில் கால்வாய்கள் தூா்வாரும் பணிகளை வரும் அக். 2-ஆவது வாரத்துக்குள் முடிக்குமாறு அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் உத்தரவிட்டாா்.
புதுச்சேரியில் வடகிழக்குப் பருவ மழையை எதிா்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பொதுப் பணித் துறை அமைச்சா் மல்லாடி கிருஷ்ணா ராவ் செவ்வாய்க்கிழமை அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டாா்.
இதையடுத்து, உப்பனாறு, கருவடிக்குப்பம், கோரிமேடு உள்ளிட்ட முக்கிய கால்வாய்களில் நடைபெற்று வரும் தூா்வாரும் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தினாா். இப் பணிகளை அக்டோபா் மாதம் 2-ஆவது வாரத்துக்குள் நிறைவு செய்யவும் அவா் உத்தரவிட்டாா்.
Advertisement
Advertisement
மேலும், சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது, பொதுப்பணித் துறை தொடா்பாக எம்எல்ஏ.க்கள் முன்வைத்த கோரிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதில் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளா் வீரசெல்வம், உதவிப் பொறியாளா்கள் மதிவாணன், லூயி பிரகாசம், ஸ்ரீநாத் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.