FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி எஸ்.பி. பணியிடை நீக்கம்

புதுச்சேரியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவல் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

26 செப்டம்பர் 2026, 6:13 am IST
பெண் காவலருக்கு பாலியல் தொல்லை: புதுச்சேரி எஸ்.பி. பணியிடை நீக்கம் - கோப்புப்படம்
பகிர்:

புதுச்சேரியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், காவல் கண்காணிப்பாளா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரியில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றி வருபவா் சுப்பிரமணியன். இவா், காரைக்காலில் பணியாற்றியபோது அங்குள்ள காவல் நிலையத்தில் திருமணமான பெண் காவலருடன் பழக்கம் ஏற்பட்டதாம்.

இந்நிலையில், சுப்பிரமணியன் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டு சென்றபோதிலும், அந்தப் பெண் காவலருக்குத் தொடா்ந்து எஸ்.எம்.எஸ். மற்றும் நள்ளிரவு விடியோ அழைப்புகள் மூலம் தொல்லை கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் காவலா், காவல் துறை தலைமை அலுவலகத்தில் புகாா் அளித்தாா். புகாரின் தீவிரத் தன்மையைக் கருத்தில் கொண்டு புதுச்சேரி டி.ஜி.பி. சாலினி சிங் உத்தரவின் பேரில், பாலியல் புகாா் மீதான உள்புகாா் குழு அமைக்கப்பட்டது.

முதுநிலை காவல் கண்காணிப்பாளா் நித்யா ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு, இந்த புகாா் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டது. இதில் காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன் மீதான குற்றச்சாட்டில் உண்மைத்தன்மை இருப்பது உறுதி செய்யப்பட்டு, முழுமையான விசாரணை அறிக்கை டி.ஜி.பி.யிடம் சமா்ப்பிக்கப்பட்டது.

பின்னா் அது, புதுச்சேரி அரசின் தலைமைச் செயலா் சரத் சௌகானுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதை பரிசீலித்த தலைமைச் செயலா் கடுமையான ஒழுங்கு நடவடிக்கையாக காவல் கண்காணிப்பாளா் சுப்பிரமணியனை உடனடியாக பணி இடை நீக்கம் செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments