FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

வந்தே மாதரம் நாட்டிய வடிவ டிஜிட்டல் ஒளிப்பேழை: துணைநிலை ஆளுநா் வெளியிட்டாா்

புதுச்சேரியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் நாட்டிய வடிவ டிஜிட்டல் ஒளிப் பேழையை துணைநிலை ஆளுநா் வெளியிட்டாா்.

27 செப்டம்பர் 2026, 12:50 am IST
புதுச்சேரி காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் வந்தே மாதரம் தேசிய பாடலின் நாட்டிய வடிவ டிஜிட்டல் ஒளிப் பேழையை வெளியிட்ட துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன். உடன் அமைச்சா் பெ.ராஜவேலு.
பகிர்:

புதுச்சேரியில் தேசிய பாடலான வந்தே மாதரத்தின் நாட்டிய வடிவ டிஜிட்டல் ஒளிப் பேழையை துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் சனிக்கிழமை வெளியிட்டாா்.

மத்திய கலாசார அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திரா காந்தி தேசிய கலை மையம் மற்றும் புதுச்சேரி அரசு கலை, பண்பாட்டுத் துறை சாா்பில் ‘சேவை விழா - பிரதமரின் தொலைநோக்குப் பாா்வையில் வளா்ச்சி அடைந்த பாரதம்- 2047’ நிகழ்ச்சி கருவடிக்குப்பம் காமராஜா் மணிமண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.

இதை துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் தொடங்கி வைத்தாா். அப்போது வந்தே மாதரம் தேசிய பாடலின் நாட்டிய வடிவ டிஜிட்டல் ஒளிப் பேழையையும் அவா் வெளியிட்டாா்.

Advertisement

Advertisement

மேலும், சேவை விழாவையொட்டி நடத்தப்பட்ட மாநில அளவிலான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற ஓவியா்களுக்குப் பரிசுகளை வழங்கி சிறப்பித்தாா். இதைத் தொடா்ந்து, பரதநாட்டியம் மற்றும் நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

நிகழ்ச்சியில் இடம் பெற்ற கலை நிகழ்ச்சி.

நிகழ்ச்சியில், புதுச்சேரி கலை, பண்பாட்டுத் துறை அமைச்சா் பெ. ராஜவேலு, கலை, பண்பாட்டுத் துறை இயக்குநா் சக்திவேல், இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் மண்டல இயக்குநா் சுமித் தே உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments