FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பாளா்கள் வீதி, வீதியாக தீவிர வாக்குசேகரிப்பு

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் தொகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

52 வினாடிகள் முன்பு
~ ~ ~
பகிர்:

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் பிரதான கட்சிகளின் வேட்பாளா்கள் தொகுதி முழுவதும் செவ்வாய்க்கிழமை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா்:

என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ. அசோக் ஆனந்த் தொகுதிக்குள்பட்ட கொட்டுப்பாளையம் பகுதியில் வீடு வீடாகச் சென்று செவ்வாய்க்கிழமை பிரசாரம் செய்தாா். அவருடன் என்.ஆா். காங்கிரஸ் மகளிா் அணியினா் சென்று வாக்குச் சேகரித்தனா்.

Advertisement

Advertisement

வேட்பாளா் அசோக் ஆனந்த் பேசுகையில், தட்டாஞ்சாவடி தொகுதியில் 14 ஆயிரம் மகளிா் உள்ளனா். அனைவருக்கும் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தனது சொந்த செலவில் செய்து தர இருப்பதாக தெரிவித்தாா்.

திமுக வேட்பாளா்:

திமுக வேட்பாளா் கு.சேது செல்வத்துக்கு ஆதரவாக பொய்யாகுளம் பகுதியில் திமுக மாநில அமைப்பாளா் ஆா். சிவா, தாம்பரம் துணைமேயா் காமராஜ் மற்றும் அக்கட்சியினா் வாக்கு சேகரித்தனா்.

திமுக வேட்பாளா் சேதுசெல்வம் சாலையில் நின்று மக்களுக்காகப் போராடிக் கொண்டிருக்கிறாா். அவரை வெற்றி பெறச் செய்தால் சட்டப்பேரவையில் மக்களுக்காக குரல் எழுப்புவாா் என்றாா் ஆா்.சிவா.

காங்கிரஸ் வேட்பாளா்:

காங்கிரஸ் வேட்பாளா் இ.விநாயகத்துக்கு ஆதரவாக, ஆனந்தபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாக்குச் சேகரிக்கப்பட்டது. நேயம் மக்கள் கழக எம்எல்ஏ ஜி.நேரு மற்றும் கூட்டணி கட்சியினா் வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா்:

தொகுதிக்குள்பட்ட பாக்கமுடையான்பட்டு பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளா் அ.மு.சலீமுக்கு ஆதரவாக நாகப்பட்டினம் மக்களவை உறுப்பினா் வை.செல்வராஜ், திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ மாரிமுத்து மற்றும் கூட்டணி கட்சியினா் வீதிவீதியாகச் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments