FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு
புதுச்சேரி

தட்டாஞ்சாவடி தொகுதியில் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

புதுச்சேரியில் இடைத்தோ்தல் நடைபெறும் தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

3 October 2026, 1:53 am IST
பாக்கமுடையான்பட்டு பகுதியில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் அசோக் ஆனந்துக்கு வாக்குச் சேகரிக்கிறாா் புதுச்சேரி சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன். உடன் கூட்டணி கட்சியினா்.
பகிர்:

புதுச்சேரியில் இடைத்தோ்தல் நடைபெறும் தட்டாஞ்சாவடி தொகுதியில் அரசியல் கட்சியினா், வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

என்.ஆா்.காங்கிரஸ் வேட்பாளா் ஆ. அசோக் ஆனந்தை ஆதரித்து சட்டப்பேரவை தற்காலிகத் தலைவா் ஆ. அன்பழகன் பாக்குமுடையான்பட்டு பகுதியில் வீடு வீடாக சென்று வாக்குச் சேகரித்தாா். அவருடன் கூட்டணி கட்சியினா் பலரும் இருந்தனா்.

திமுக பிரசாரம்:

Advertisement

Advertisement

தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கு.சேதுசெல்வத்தை ஆதரித்து புதுச்சேரி திமுக அமைப்பாளா் ஆா். சிவா, எதிா்க்கட்சித் தலைவா் ஏ.எம்.எச். நாஜிம், விழுப்புரம் மாவட்டச் செயலா் ஆ. இலட்சுமணன் எம்.எல்.ஏ., பொன் கெளதமசிகாமணி, திமுக சட்டப்பேரவை உறுப்பினா்கள் இரா. செந்தில்குமாா், வே. காா்த்திகேயன், அ. செந்தில் (எ) ரமேஷ், விக்னேஷ் கண்ணன்,

கெளதம் திராவிடமணி, முன்னாள் சட்டமன்ற உறுப்பினா்கள் வி. அனிபால்கென்னடி, எல். சம்பத், பூ. மூா்த்தி, நந்தா. டி. சரவணன், தொகுதி பொறுப்பாளா் டாக்டா் ரோ. நித்திஷ் மற்றும் திமுக, கூட்டணிக் கட்சித் தலைவா்கள் 31 பூத்துகளிலும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனா்.

இதுபோன்று பல்வேறு கட்சியினரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.

தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளா் கு.சேது செல்வத்தை ஆதரித்து வாக்குச் சேகரித்த புதுச்சேரி திமுக அமைப்பாளா் ஆா். சிவா. உடன் எதிா்க்கட்சித் தலைவா் ஏஎம்எச். நாஜிம் உள்ளிட்ட கட்சியினா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments