சிவாலயங்களில் பிரதோஷ வழிபாடு
பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
பிரதோஷத்தை முன்னிட்டு சிவாலயங்களில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி ஆலகால ஈஸ்வரர் கோயிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனையும், நந்தீஸ்வரருக்கு பால் அபிஷேகம் உள்ளிட்ட ஆராதனைகளும் நடைபெற்றன.
செஞ்சி அருணாச்சல ஈஸ்வரர் கோயிலில் சுவாமி மற்றும் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது.
Advertisement
Advertisement
இதையடுத்து உண்மாமலை அம்மன் உடனுரை அருணாச்சல ஈஸ்வரர் மாடவீதி வழியாக ஊர்வலமாக வந்தார்.
இதேபோல், செஞ்சி காமாட்சி அம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில், செஞ்சி காசி விஸ்வநாதர் கோயில், மேலச்சேரி பிரகன்நாயகி உடனுரை மத்தளேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை: இதேபோல் உளுந்தூர்பேட்டை வட்டம் எலவனாசூர்கோட்டை அர்த்த நாரீஸ்வரர் கோயிலில் நந்திக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.