FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

தாய், தந்தைக்கு கத்திக் குத்து: வளர்ப்பு மகன் கைது

சங்கராபுரம் அருகே தாய், தந்தையை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வளர்ப்பு மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

24 ஜனவரி 2024, 10:11 pm IST
பகிர்:

சங்கராபுரம் அருகே தாய், தந்தையை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற வளர்ப்பு மகனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

 சங்கராபுரம் மேட்டுத் தெருவைச் சேர்ந்தவர் அக்பர் (60). இவரது மனைவி மதர்நூஷா (55). இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது. முகமதுரஹீம் (37) என்பவரை மகனாக தத்தெடுத்து வளர்த்து வந்தனர்.

 அக்பர் சங்கராபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் பெட்டிக் கடை நடத்தி வருகிறார். அக்பரிடம் முகமதுரஹீம் சொத்தை பிரித்து கொடுக்குமாறு வலியுறுத்தி வந்தார். ஆனால், அக்பர் சொத்தை பிரித்துக் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார்.

Advertisement

Advertisement

 வியாழக்கிழமை காலை வழக்கம்போல அக்பர் பெட்டிக் கடைக்கு வியாபாரம் செய்யச் சென்று விட்டார். அப்போது வீட்டுக்கு வந்த முகமதுரஹீம், மதர்நூஷாவிடம் மீண்டும் சொத்தை பிரித்துக் கொடுக்குமாறு தகராறு செய்துள்ளார்.

 அப்போது, திடீரென அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மதர்நூஷாவை சரமாரியாக குத்தினார்.

மேலும், ஆத்திரம் தீராத முகமதுரஹீம், அங்கிருந்து பெட்டிக் கடைக்குச் சென்றார். அங்கு அக்பரையும் அவர் கத்தியால் குத்தினார்.   இதில், பலத்த காயமடைந்த கணவன்-மனைவி இருவரும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

 மதர்நூஷா தீவிர சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.   இதையடுத்து தாய், தந்தையை கத்தியால் குத்திக் கொல்ல முயன்ற முகமதுரஹீமை சங்கராபுரம் போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments