பறிமுதல் வாகனங்கள் 7-இல் ஏலம்
விழுப்புரத்தில் காவல் துறை சார்பில் மார்ச் 7ஆம் தேதி வாகன ஏலம் நடைபெறுகிறது.
விழுப்புரத்தில் காவல் துறை சார்பில் மார்ச் 7ஆம் தேதி வாகன ஏலம் நடைபெறுகிறது.
மாவட்டத்தில், மதுவிலக்கு வழக்குகளில் காவல் துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு வருகிறது.
இந்த வகையில், விழுப்புரம் காகுப்பம் காவல் ஆயுதப்படை மைதானத்தில், மார்ச் 7ஆம் தேதி வாகனங்கள் ஏலத்தில் விடப்பட உள்ளன.
Advertisement
Advertisement
இதில், மோட்டார் சைக்கிள்கள் 7, பைக்குகள் 35, கார் 3 உள்ளிட்ட 45 வாகனங்கள் ஏலத்தில் விடப்படும்.
திங்கள்கிழமை காலை 10 மணிக்கு பொது வாகன ஏலம் தொடங்கும் என்று, இதற்கான ஏற்பாடுகளை செய்து வரும், விழுப்புரம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.