மொபட், லாரி மீது கார் மோதல்: ஒருவர் சாவு; 4 பேர் காயம்
கள்ளக்குறிச்சி அருகே மொபெட் மீது கார் மோதியதில் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அருகே மொபெட் மீது கார் மோதியதில் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார். மேலும், அந்த கார் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.
கள்ளக்குறிச்சியை அடுத்த பைந்தந்துறை கிராமத்தைச் சேர்ந்தவர் கந்த உடையார் (53). மாட்டுத் தரகரான இவர், கனியாமூரில் வசித்து வந்தார். இவர் வியாழக்கிழமை மொபெட்டில் சின்னசேலத்தில் இருந்து தனது வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்தார். கள்ளக்குறிச்சியை அடுத்த கனியாமூர் மும்முனை சந்திப்பில் சாலையைக் கடக்க முயன்றுள்ளார்.
அப்போது, சென்னையில் இருந்து சேலம் நோக்கிச் சென்ற கார் மொபெட் மீது மோதியது. இதில் கந்த உடையார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
Advertisement
Advertisement
மேலும் அந்த கார் சாலை ஓரம் நின்றுகொண்டிருந்த லாரியின் பின்புறம் மோதியது. இதில் காரை ஓட்டிவந்த செங்கல்பட்டு பகுதியைச் சேர்ந்த செல்வின் மகன் சன்னோஜி (25), மற்றும் காரிலிருந்த விக்னேஷ்வரன் (26), விக்னேஷ் (30), பிரசாந்த் (28) ஆகியோர் காயமடைந்தனர். இவர்களில் சன்னோஜி கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையிலும், மற்ற மூவரும் தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்றனர். விபத்து குறித்து சின்னசேலம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.