மதுக் கடத்தல்: 960 மதுப் புட்டிகள் பறிமுதல்
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் மாவட்டம் வழியாக மது கடத்தப்படுவதை தடுக்க மாவட்ட போலீஸார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், விழுப்புரம் அருகேயுள்ள வாக்கூர் கூட்டுச் சாலைப் பகுதியில் மதுவிலக்கு போலீஸார் சனிக்கிழமை இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனையிட முயன்றனர். ஆனால், அந்த வாகனத்தில் வந்த 2 பேர், வாகனத்தை நிறுத்திவிட்டு இறங்கி தப்பியோடினர். இதையடுத்து, போலீஸார் வாகனத்தை சோதனையிட்டதில், அதில் 960 புதுச்சேரி மாநில மதுப் புட்டிகள் இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த மதுப் புட்டிகளை போலீஸார் பறிமுதல் செய்து, கடத்தலில் ஈடுபட்ட 2 பேரை தேடி வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.