சிறுதொழில் கடன் வழங்க இருளர் சமூக மக்கள் கோரிக்கை
ஆடு, மாடுகள் வாங்குவதற்கான சிறுதொழில் கடன் வழங்கக் கோரி, செஞ்சி அருகேயுள்ள கெங்கவரம் பகுதி இருளர் சமூகத்தினர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
ஆடு, மாடுகள் வாங்குவதற்கான சிறுதொழில் கடன் வழங்கக் கோரி, செஞ்சி அருகேயுள்ள கெங்கவரம் பகுதி இருளர் சமூகத்தினர், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
செஞ்சி அருகேயுள்ள கெங்கவரம் கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமூக மக்கள் 45 பேர், அப்பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் உள்ளிட்டோர் தலைமையில் விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் புதன்கிழமை தனித்தனியாக கோரிக்கை மனு அளித்து கூறியதாவது: செஞ்சி அருகே உள்ள கெங்கவரம், கணக்கன்குப்பம், தாண்டவசமுத்திரம், கல்லேரி உள்ளிட்ட கிராமங்களில், இருளர் சமூகத்தைச் சேர்ந்த 75 குடும்பத்தினர் வசிக்கிறோம்.
நாங்கள் தினமும் விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வந்தோம். கடந்த சில மாதங்களாக வறட்சியால் விவசாயமும் நடைபெறாததால், வேலைக்கு வழியின்றி தவித்து வருகிறோம். எங்களுக்கு சொந்தமாக நிலம் போன்ற எந்த வசதியும் இல்லாமல் ஏழ்மை நிலையில் வசித்து வருகிறோம்.
இதனால், எங்கள் குடும்பத்தினர் பிழைப்புக்காக, ஆடு, மாடு வாங்குவதற்கு சிறு தொழிலுக்கான வங்கிக் கடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். மனுவைப் பெற்ற அதிகாரிகள், மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து அனுப்பி வைத்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.