FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்தில் புதிதாக வெட்டப்பட்ட கிணறு ஆய்வு

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பு.கிள்ளனூர், காட்டுநெமிலி, பில்லூர், பாலி, மழவராயனூர், ஆசனூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில்

Updated On : 7 ஜூன் 2018, 8:42 am IST
பகிர்:

உளுந்தூர்பேட்டை ஒன்றியத்துக்குள்பட்ட பு.கிள்ளனூர், காட்டுநெமிலி, பில்லூர், பாலி, மழவராயனூர், ஆசனூர் ஆகிய கிராமங்களில் உள்ள ஏரிகளில், உலக வங்கி உதவியுடன் நீர்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தலா ரூ. 30 லட்சம் மதிப்பில் திறந்தவெளிக் கிணறுகள் வெட்டப்பட்டன. இதன் மூலமாக ஏரி நீர் கிணற்றில் நிரம்பிய பிறகு, எஞ்சியுள்ள நீர் அந்த கிணற்றின் மூலமாக நீர் செறிவூட்டும் வகையில் திட்டப் பணிகள் நடைபெறுகின்றன.
 மொத்தம் ரூ. 196 லட்சம் மதிப்பீட்டில் வெட்டப்பட்ட திறந்து வெளிக் கிணறுகளை உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் இரா.குமரகுரு அண்மையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
 அப்போது, பொதுப்பணித் துறை செயற்பொறியாளர் ராஜா, உதவி செயற்பொறியாளர் சாந்தி, உதவிப் பொறியாளர் ஞானசேகர், அதிமுக ஒன்றியச் செயலாளர் வழக்குரைஞர் மணிராஜ், நகரச் செயலாளர் எஸ்.துரை, முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் இரா.சாய்ராம், மாநில பொதுக் குழு உறுப்பினர் வளர்மதி பாண்டியராஜ் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது, எதிர்காலத்தில் அந்த கிராமங்களைச் சுற்றி நிலத்தடி நீர்மட்டம் ஓரடி முதல் 3 அடி வரை உயரும் என்று பொதுப் பணித் துறையினர் தெரிவித்தனர்.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments