குண்டர் சட்டத்தின் கீழ் சாராய வியாபாரி கைது
திண்டிவனம் அருகே சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே சாராய வியாபாரியை குண்டர் சட்டத்தின் கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
திண்டிவனம் அருகே வைரபுரம் பழைய காலனியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் அர்ஜூனன்(38) (படம்). அந்த பகுதியில் மது கடத்தல், சாராயம் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவரை திண்டிவனம் மது விலக்கு போலீஸார் கைது செய்து, கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுபோன்ற சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபடுவதைத் தடுக்கும் பொருட்டு, இவரை குண்டர் சட்டத்தின்கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பரிந்துரைத்தார்.
இந்த நிலையில், கடலூர் மத்திய சிறையில் விசாரணைக் கைதியாக இருந்து வந்த அர்ஜூனனை மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் உத்தரவின்பேரில் குண்டர் சட்டத்தின்கீழ் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.