FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

அடிப்படை வசதிகள் கோரி விழுப்புரத்தில் சாலை மறியல்

விழுப்புரத்தில் அடிப்படை வசதிகள், குடிநீர் விநியோகத்தை முறையாக செய்து தரக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Updated On : 26 ஜூன் 2018, 8:54 am IST
பகிர்:

விழுப்புரத்தில் அடிப்படை வசதிகள், குடிநீர் விநியோகத்தை முறையாக செய்து தரக் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 விழுப்புரம், வழுதரெட்டி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். திங்கள்கிழமை காலை இப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்து திடீரென திங்கள்கிழமை காலை 9.30 மணி அளவில் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 தகவல் அறிந்த தாலுகா போலீஸார் அங்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
 அப்போது, கடந்த சில நாள்களாக தங்கள் பகுதிக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை, கழிவு நீர் கால்வாய்கள் தூர்வாரப்படவில்லை, கொசுத் தொல்லை அதிகமாக உள்ளது. இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றனர். நகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கைகள் குறித்து தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸார் தெரிவித்தனர். இதனை ஏற்று மறியலை பொதுமக்கள் விலக்கிக் கொண்டு, கலைந்து சென்றனர். இந்த மறியலால், அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments